Connect with us

    அக்கா தம்பி என கூறி வாடகைக்கு வீடு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்த காதல் ஜோடிக்கு திடீரென ஏற்பட்ட சோகம்..!

    illegal love pair

    Tamil News

    அக்கா தம்பி என கூறி வாடகைக்கு வீடு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்த காதல் ஜோடிக்கு திடீரென ஏற்பட்ட சோகம்..!

    சென்னையில் அக்கா- தம்பி என கூறி ஒன்றாக வாழ்ந்த வந்த இருவரில், அந்த பெண்ணை இளைஞர் கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    illegal love pair

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா(23), அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(21).

    இருவரும் தஞ்சாவூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

    இதனையடுத்து சென்னைக்கு வந்த இருவரும், அக்கா- தம்பி என கூறி சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

    வீட்டின் உரிமையாளர் இருவரையும் கண்டு சந்தேகப்பட, இருவரும் தங்களை அக்கா தம்பி என்றும் வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு வரும் சந்தோஷ், மஞ்சுளாவிடம் சண்டையிட்டுள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மஞ்சுளா, பெங்களூரில் பணிபுரியும் தனது முன்னாள் காதலரிடம் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.

    மஞ்சுளா தனது முன்னாள் காதலனிடம் செல்போனில் பேசுவதை அறிந்த சந்தோஷ் குமார் தினமும் மஞ்சுளாவை தாக்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    மேலும், கடந்த சில தினங்களாக வீட்டு செலவுக்கு சந்தோஷ் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

    இதனால் மஞ்சுளா கடந்த இரண்டு தினங்களாக சமைக்காமல் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார், வீட்டில் மஞ்சுளா சாப்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்துள்ளார்.

    இது குறித்து மஞ்சுளாவிடமும் சண்டை போட்டு உள்ளார்.

    இந்த சண்டை பெரிதாக ஏற்கனவே முன்னாள் காதலருடன் பேசுவதால் ஆத்திரமடைந்த சந்தோஷ், மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்து பின் துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மஞ்சுளாவை கொலை செய்து மின்விசிறியில் தொங்கவிட்ட பின் பயந்து போன சந்தோஷ் குமார் அங்கிருந்து நேராக ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று பெண் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

    மேலும், இன்று காலை காவல் கட்டுப்பாட்டறைக்கு கால் செய்து தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.

    விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது சந்தோஷ்குமார் தான் செய்ததை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து சந்தோஷ் குமாரை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!