Connect with us

    தாயின் கையை பிடித்து இழுத்து கிண்டல் செய்தவனை அடித்து கொன்று உடலை தாயின் காலடியில் வைத்த மகன்..!

    Attack

    Tamil News

    தாயின் கையை பிடித்து இழுத்து கிண்டல் செய்தவனை அடித்து கொன்று உடலை தாயின் காலடியில் வைத்த மகன்..!

    ஆந்திராவில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த வாலிபரை ஓடஓட விரட்டி கல்லால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Attack

    ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேரந்தவர் சீனு, வயது 45.

    இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்து விட்டு அப்பகுதியை சேர்ந்த கௌரி என்ற பெண்ணை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து உள்ளார்.

    இதனால் அந்த பெண் அழுது கொண்டே தனது மகனிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அவரது மகன் பிரசாத் தனது தாயை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சீனு இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

    இதனை கண்டு பயத்தில் சீனு அங்கிருந்து தப்பியோடினார்.

    அப்போது அவரை விடாமல் துரத்தி சென்ற அந்த வாலிபர், ஓடஓட விரட்டி கல்லால் அடித்து கொலை செய்தார்.

    அதில், ஆத்திரம் தீராத அந்த வாலிபர், கொலை செய்யப்பட்ட சீனுவின் உடலை தரதரவென சாலையில் இழுத்து வந்து தனது தாயின் காலடியில் வீசினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிழந்த சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!