Viral News
வீட்டில் மாமரக் கன்று நட்டதற்காக தாய், தந்தையை அடித்து கொன்ற மகன்..!
கேரளாவில் வீட்டில் மா மரக்கன்று வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் தந்தையை மகன் ஒருவர் கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளிகுளங்கர இஞ்சக்குண்டு பகுதியைச் சேர்ந்த குட்டன். இவருடைய மனைவி சந்திரிகா.
குட்டன் ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்துவருகிறார்.
இந்த தம்பதியின் மகன் அனீஸ். 38 வயதான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சொந்த ஊர் திரும்பிய அனீஸ் தற்போது உள்ளூரிலேயே கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் முன்பாக மா மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார் சந்திரிகா.
அப்போது வீட்டிற்கு வந்த அனீஸ், அந்த மரக்கன்றுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து மரக்கன்றுகளை அகற்றியது குறித்து சந்திரிகா அனீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுப்பிரமணியனும் வீட்டிற்கு வந்துள்ளார்.
மா மரக்கன்று வைத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது.
ஒருகட்டத்தில், அனீஷ் இருவரையும் மண் வெட்டி யால் சரமாரியாக தாக்கிய போது இருவரும் தப்பி ஓட முயன்றனர்.
அப்போது வீட்டில் இருந்த அரிவாளுடன் ஓடிய அனீஷ், இருவரையும் சரமாரியாக வெட்டினார்.
இதில் குட்டனும் ( 60 ) , சந்திரிகாவும் ( 55 ) கழுத்தில் ஆழமாக வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர்.
இந்த கொலை குறித்து அனீஷ் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
போலீசார் வருவதற்குள் அனீஷ் அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றுவிட்டார்.
இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அனீஸை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், திருச்சூரில் உள்ள காவல்துறை ஐஜி அலுவலகத்தில் அனீஸ் நேற்று சரணடைந்திருக்கிறார்.
இந்த வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
கேரளாவில் மா மரக்கன்று வைத்த தகராறில் மகனே பெற்றோரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
