Viral News
திருநங்கையுடன் காதல்; மனைவியின் அனுமதியுடன் திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழும் இளைஞர்..!
திருநங்கையை காதலித்து மனைவியின் அனுமதியுடன் திருமணம் செய்த இளைஞரின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஹிர்(வயது 32).
இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது.
இதற்கிடையில் பஹிருக்கு கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இவர்களது நட்பு காதலாக மாறியது. இருப்பினும் பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்த நிலையில் அவரது மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார்.
அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார்.
பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில்:
இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும்.
இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம் என்று கூறினார்.
வித்தியாசமான இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
