Viral News
விருந்தில் மட்டன் கறி துண்டு வைக்காததால் ஆத்திரத்தில் இளைஞர்கள் செய்த வெறிச்செயல்..!!
விருந்தில் கறி துண்டு வைக்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்களால் அநியாயமாக ஒரு உயிர் போனது.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஷேர்கான் மற்றும் சிவா ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது விருந்தில் உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஷேர்கான், சிவாவுக்கு மற்றவர்களை விட இறைச்சி துண்டுகளை குறைவாக போட்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த சிவா அன்று இரவு ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் அங்கு பெரும் பிரச்சினை உருவான நிலையில், இதுகுறித்து ஷேர்கான் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிவாவை, ஷேர்கான் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சந்தித்துள்ளார்.
நமக்குள் பிரச்சினை எதற்கு வா சமாதானம் பேசலாம் என்று கூறி ஷேர்கான், சிவாவை தனியே அழைத்துச் சென்றுள்ளனர்.
பிறகு ஷேர்கான் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை வெட்டிக்கொலை குழி தோண்டி புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சிவாவை காண வில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஷேர்கான் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
