Viral News
12 ஆண்டுகளுக்கு முன் வேர்க்கடலை வியாபாரிடம் வாங்கிய 25 ரூபாய் கடனை கொடுக்க அமெரிக்காவிலிருந்து வந்த இளைஞர்; வட்டியுடன் சேர்த்து எவ்வளவு கொடுத்தார் தெரியுமா??
கடற்கரையில் வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ. 25 கடனை 12 ஆண்களுக்கு பிறகு நினைவில் வைத்து திருப்பி கொடுத்த வாலிபரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது மகன் பிரவீனை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு வியாபாரி ஒருவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்று கொண்டிருந்தார். மோகன் தனது மகனுக்கு 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் அப்போது அவரிடம் கொடுக்க பணமில்லை. இந்நிலையில் அந்த வியாபாரி மறுநாள் கொடுக்கும்படி கூறி வேர்க்கடலையை கொடுத்துள்ளார்.
மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் கடற்கரைக்கு சென்றபோது வேர்க்கடலை விற்றவர வரவில்லை. அதன்பின் மோகன், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.
இதற்கிடையே விடுமுறையில் காக்கிநாடாவுக்கு வந்து பிரவீன், வேர்க்கடலை வியாபாரியிடம் வாங்கிய ரூ.25 கடனை திருப்பி கொடுக்க விரும்பினர்.
இதற்காக காக்கிநாடா கடற்கரைக்கு சென்று வேர்க்கடலை விற்றவரை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும் காக்கிநாடா எம்.எல்.ஏ.வுமான சந்திர சேகரிடம் தெரிவித்தார். மேலும் வேர்க்கடலை விற்றவருடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பினார்.
அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த நபரை தேடினர். அதை பார்த்த சிலர் வேர்க்கடலை விற்ற அந்த நபர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வேர்க்கடலை விற்றவரின் மனைவியை எம்.எல்.ஏ. வீட்டுக்கு பிரவீன் வரவழைத்தார். அவரிடம் பிரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 25 ரூபாயுடன் வட்டியோடு சேர்த்து 23 ஆயிரமாக திருப்பி கொடுத்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
