Tamil News
யூடியூப் பார்த்து நவீன முறையில் மதுபானம் தயாரித்த பட்டதாரி இளைஞர்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்த பட்டதாரி இளைஞரை போலீஸ் அதிரடியாக கைது செய்தனர்.
ராஜபாளையத்தை அடுத்த ஸ்ரீரங்க பாளையம் பகுதியை சேர்ந்த சிவரஞ்சித்.
பட்டதாரியான இவர் அப்பள வியாபாரம் செய்வதாக கூறி மதுரை கோமதிபுரம் பகுதியில் உள்ள மல்லிகை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது அம்மாவுடன் 4 மாதமாக தங்கியுள்ளார்.
நேற்று இரவு மாடி வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதோடு இரு சக்கர வாகனத்தையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்து விசாரணை நடத்திய போது சிவரஞ்சித் யூடியூப் பார்த்து
போலியாக மதுபானங்கள் தயாரித்தது மதுபானத்தை ருசித்த போது அளவுக்கு அதிகமான போதையால் மாடி வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டதும், அசம்பாவித செயல்களிலும் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவரது வீட்டை சோதனையிட்டபோது குக்கர், மதுபானங்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள், டியூப் மற்றும் 20 லிட்டர் மதுபானங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
மேலும் அவரை கைது செய்து இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
