World News
குண்டாக இருந்ததால் ரிஜெக்ட் செய்த காதலி; ஒரே ஆண்டில் 70 கிலோ உடல் எடையை குறைத்து வியக்க வைத்து இளைஞர்..!!
காதலி பிரேக் அப் செய்ததால் ஒரே ஆண்டில் 70 கிலோ உடல் எடையை குறைத்து இளைஞர் ஒருவர் வியக்க வைத்துள்ளார்.
காதலில் தோற்றால் தண்ணியடித்து தாடி வளர்த்து, அடிக்கடி புகைபிடித்து தனது வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளமால், எந்த உடல் அமைப்பைக் காரணம் காட்டி காதலித்த பெண் விட்டுச் சென்றாரோ அதே உடலை ஒரே ஆண்டிற்குள் அடையாளமில்லால் மாற்றியிருக்கிறார் புவி என்கிற இளைஞர்.
இவரை சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
144 கிலோ உடல் எடை கொண்ட அவர் காதலி உடல் எடை அதிகமாக இருக்கிறார் என பிரேக் அப் செய்து இருக்கிறார்.
இதனால், மனமுடைந்து, கடின முயற்சியுடன் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி 2021ஆம் ஆண்டு 144 கிலோ எடைக்கொண்ட அந்த இளைஞர் தற்போது ஒரே ஆண்டில் 70 கிலோ உடல் எடையை குறைத்து, வியக்க வைத்துள்ளார்.
மேலும், கடின உணவு முயற்சி, கோபம் என அனைத்தையும் கொண்டு இதனை நிகழ்த்தி இருக்கிறார்.
இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரின் இன்ஸ்டா பதிவிலும், டிக்டாக்கில் வெளியிட்டு இருக்கிறார்.
புவி வெளியிட்ட எடைகுறைப்பு விடியோவில் பலரும் இது சிகிச்சை மூலம் மட்டுமே சாத்தியம் என கமெண்ட் அடித்தாலும், எந்த விதமான சிகிச்சையையும் எடை குறைப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்
அன்று இவரின் காதலை ஒரு பெண் நிராகரித்தார். ஆனால் இன்று பல பெண்கள் இவருக்கு காதல் ப்ரப்போஸ் செய்து வருகிறார்களாம்.
