Connect with us

    “எனது மனைவிக்கு ஆண் உறுப்பு தான் இருக்கு; தயவு செஞ்சு விவாகரத்து தாங்க” – சுப்ரீம் கோர்ட்டில் கதறிய இளைஞர்..!

    Youth seeks divorce

    Viral News

    “எனது மனைவிக்கு ஆண் உறுப்பு தான் இருக்கு; தயவு செஞ்சு விவாகரத்து தாங்க” – சுப்ரீம் கோர்ட்டில் கதறிய இளைஞர்..!

    ஆண் உறுப்பு இருக்கும் பெண்ணை, தனக்கு ஏமாற்றி திருமணம் செய்துவைத்து விட்டார்கள், இதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி வாலிபர் ஓருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Youth seeks divorce

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்றும், அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவருக்கு தெரிய வந்தது.

    பரிசோதனையில், அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதனை சரி செய்ய மருத்துவமனையில் அவர் ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    மருத்துவர் கூற்றுப்படி, அவருக்கு பெண் பாலின உறுப்பு இருந்தாலும், தாம்பத்ய வாழ்க்கையோ, குழந்தை பிறப்போ சாத்தியமில்லை என்று தெரியவந்தது

    இதைத்தொடர்ந்து தனது மனைவியை அழைத்து செல்லுமாறு அவரது தந்தையிடம் அவர் கூறினார்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. அதோடு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

    இதற்கிடையே தனது மனைவி பெண் அல்ல என்றும், இதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதேபோல குவாலியரில் உள்ள ஐகோர்ட்டு பெஞ்சும் அவரது மனுவை தள்ளுபடி செய்து இருந்தது.

    மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    அந்த மனுவில் தனது மனைவியிடம் பெண்மை இல்லை என்றும், பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் அவரிடம் இல்லை என்றும், அவர் பெண்ணே இல்லை என்றும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும், இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதோடு மனைவியின் மருத்துவ தகவல்களையும் சமர்பித்து இருந்தார்.

    இந்த மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மனைவி பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!