Viral News
அண்ணியிடம் முத்தம் கேட்டு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்; பின்னர் நடந்த விபரீதம்..!
போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி முத்தம் கேட்டு வந்தா நபர் மீது பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநலத்தில் நடந்துள்ளது.
விசாரணையில் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்து வந்த நபர் அந்த பெண்ணுக்கு மைத்துனர் உறவு என்பது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்திலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் தனக்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லைகொடுத்து வருவதாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
அண்ணி முறையாகும் திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொலைபேசியில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் தொலைபேசியில் அழைத்து முத்தம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.
இதுகுறித்து முதலில் அந்த பெண் தனது கணவனின் சகோதரியிடம் கூறினார்.
பின்னர் இது குறித்து அறிந்த கணவன் ஆத்திரமடைந்ததுடன் அந்த நபரை சந்திக்க வருமாறு தெரிவித்தார்,
இதற்கிடையில் அந்த நபருக்கு பல முறை எச்சரித்தும் அவரது தொல்லை ஓயவில்லை.
அந்த நபர் போன் செய்யும்போது நீங்கள் யார் எதற்காக அழைக்கிறீர்கள் என அந்த பெண் கேட்கும்போதெல்லாம் முதலில் ஒரு முத்தம் கொடுங்கள் பிறகு எனது பெயர் மற்றும் விவரங்களை கூறுகிறேன் என அந்த இளைஞர் கூறி வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் அந்த பெண் போனை துண்டித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த இளைஞர் பலமுறை போன் செய்து அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார்
சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் அண்ணிக்கு போன் செய்து அவரிடமும் ஆபாசமாக பேசியுள்ளார்,
பின்னர் அந்த எண் குறித்து விசாரித்ததில் அந்த இளைஞரின் மாமியார் வீடு தாங்கள் வசிக்கும் கிராமத்தில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் அந்த வில்லங்க மனிதர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மைத்துனர் உறவு என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் அந்த குறிப்பிட்ட நபர் குறித்து அவரது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினார்.
ஆனால் இதனால் அவர்களின் இரு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அந்த நபர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என முடிவு செய்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசி முத்தம் கேட்டு தொல்லை செய்து வந்த இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.
