Tamil News
“என் பொண்டாட்டிய என்னுடன் சேர்த்து வைங்க” – செல்போன் டவரில் ஏறி குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்த இளைஞர்..!
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவருக்கு திருமணமாகி வடிவுகரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவரிடம் கோபித்து கொண்க்டு வடிவுகரசி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பலமுறை தன்னுடன் வாழ அழைத்தும் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்குள்ள செல்போன் கோபுரத்தில் மீது ஏறிய அவர் காவல்கட்டுபாட்டு அறைக்கு அழைத்துள்ளார்.
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மனைவி அழைத்து வந்தால் தான் இறங்குவேன் என தெரிவித்தை அடுத்து செந்தில்குமாரின் மனைவியை அழைத்து வந்தனர்.
மனைவியை பார்த்தவுடன் செந்தில்குமார் கீழே இறங்கி வந்தார்.
அதன்பின்னர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்
