Uncategorized
“டேய்…எங்கடா கைய வைக்கிற; கைய எடுறா” – ஓடும் பஸ்ஸில் நள்ளிரவில் பெண்களிடம் சில்மிஷம்; வாலிபரை நையப்புடைத்த உறவினர்கள்..!!
இந்தியாவில், தினம் தினம் பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் கேள்விக்குறி ஆகிக் கொண்டு வருகிறது.
இரவு, பகல், வீடு, வேலை என 360 கோணத்திலும் பெண்களுக்கான அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இளமை, மூப்பு என வேறுபாடு இருப்பதில்லை.
பெண்களுக்கு பாலியல் வ.ன்கொடுமை, அவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து மிரட்டுதல், பொது இடங்களில் பா.லி.யல் சீண்டல் என பல்வேறு வகையான கு.ற்ற.ங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஓடும் பஸ்ஸில் நள்ளிரவில் பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்ஸின் முன் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்களிடம் பின் இருக்கையில் மதுபோதையில் அமர்ந்திருந்த 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனை அந்த பெண்கள் கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர்களுக்கு கைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.
அதனைதொடர்ந்து கும்பகோணம் நால்ரோடு பகுதிக்கு அந்த பேருந்து வந்ததும், அங்கு காத்திருந்த பெண்ணின் உறவிகர்கள், பேருந்தில் சில்மிஷம் செய்த நபரை கீழே இறக்கி தர்மஅடி கொடுத்துள்ளனர்.
அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் பேருந்தில் சில்மிஷன் செய்த நபரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் நேற்றிரவு கும்பகோணம் நால்ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
