Tamil News
கணவரை விட்டு விட்டு இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை; கதறிய குழந்தைகள்…!!
இன்ஸ்டாகிராமில் பழகியவரோடு ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரை கைவிட்டு குழந்தைகளுடன் சென்ற பெண் மீட்கப்பட்ட நிலையில், லைக்ஸ் வலை விரித்து பெண்ணை கடத்திச் சென்று சித்ரவதை செய்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் சைபுதீன்.
இவர் டிக் டாக் செயலி உபயோகம் செய்து வந்த நிலையில், அதில் வீடியோ பதிவிடும் பெண்களை குறிவைத்து நல்லவர் போல நடித்து, பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர், பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று உல்லாசமாக இருந்து, மீண்டும் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், இவர் வசித்து வரும் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த பெண்ணை குறிவைத்த சைபுதீன், கடந்த ஒரு வருடமாக பெண்ணிடம் பழகி, தனது பழக்கத்தை கள்ளக்காதலாக மாற்றியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தன்று வழக்கம்போல 2 நாட்கள் வெளியே சென்று வரலாம் என்று பெண்ணிடம் தெரிவிக்க, உடன் குழந்தைகளையும் அழைத்து வந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று கூறி இருக்கிறார்.
கள்ளக்காதலில் மதிமயங்கி இருந்த பெண்ணும் சைபுதீனுடன் சென்ற நிலையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கணவன் – மனைவியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், 4 நாட்களில் கள்ளக்காதல் கசந்ததால் சைக்கோ சைபுதீன் பெண்ணை பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், இரவுகளில் உறங்க கூட விடாமல் கொடுமை செய்த நிலையில், பெண்ணின் குழந்தைகளையும் கொடு மை செய்துள்ளார்.
இதனை அந்த பெண் தட்டிக்கேட்ட நிலையில், சைபுதீன் கள்ளக்காதலியை தாக்கி, குழந்தையை கடித்து, கத்தியால் குத்தியுள்ளார்.
கள்ளக்காதலி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றுவிடக்கூடாது என வீட்டினை பூட்டியே வைத்திருந்த நிலையில், சம்பவத்தன்று சைபுதீன் போதையில் உறங்கும்போது பெண்ணின் குழந்தை பக்கத்து வீட்டாரின் செல்போனை வைத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்க, அதன்பேரில் அதிகாரிகள் மகாராஷ்டிரா சென்று குழந்தை மற்றும் பெண்ணை மீட்டுள்ளனர். சைபுதீனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
