Connect with us

    நள்ளிரவில் பாத்ரூம் செல்ல வெளியே வந்த காது கேட்காத பெண்; கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்; அதன்பின் நடந்த விபரீதம்..!!

    Girl abuse

    Tamil News

    நள்ளிரவில் பாத்ரூம் செல்ல வெளியே வந்த காது கேட்காத பெண்; கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்; அதன்பின் நடந்த விபரீதம்..!!

    நள்ளிரவில் பாத்ரூம் செல்ல வீட்டை விட்டு வெளியே வந்த காது கேட்காத பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்த இளைஞரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Girl abuse

    சேலம் மாவட்டம் அடுத்த பன்மரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண்.

    வாய் பேச, காது கேட்க இயலாத இந்த மாற்றுதிறனாளி பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 10ம் தேதி இரவு தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது, இரவு 11.30 மணியளவில் கழிவறை செல்வதற்காக வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது, எதிர்வீட்டில் வசித்துவரும் மணிகண்டன் என்பவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து வா இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார்.

    இதற்கு இந்த பெண் மறுப்பு தெரிவித்து சத்தம்போட்டுள்ளார்.

    அந்த பெண்ணிக் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    உடனே அங்கிருந்து மணிகண்டன் ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர், மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

    இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து கைதான மணிகண்டன் ஏற்காடு மாரங்கலத்தில் உள்ள பழங்குடியினர் மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார்.

    இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!