Connect with us

    அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த பெண்ணின் வீடு புகுந்து தாலி கட்ட முயற்சித்த இளைஞர்..!!

    தாலி கட்டும் மணமகன்

    Uncategorized

    அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த பெண்ணின் வீடு புகுந்து தாலி கட்ட முயற்சித்த இளைஞர்..!!

    சென்னை கொருக்குப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    தாலி கட்டும் மணமகன்

    சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார் (52). இவருடைய மனைவி சாந்தி (47).

    இவர்களுக்கு அஸ்வினி (23) ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஸ்வினிக்கு வரும் 10ம் தேதி உறவுக்கார பையனுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவர்களின் எதிர்வீட்டில் வசிக்கும் அருண் (23) என்பவரும், அவரது அண்ணன் இனியா (28)வும் அஸ்வினியின் வீட்டிற்கு கடந்த 4ம் தேதி சென்றுள்ளனர். இவர்களில் இனியா திருநங்கை ஆவார்

    அருண் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய கழுத்தில் தாலி கட்ட முயற்சித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அருணை அடித்து விரட்டியுள்ளனர்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண் அவரது வீட்டிற்குள் சென்று, மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    உடனே அவரை காப்பாற்றி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த நிலையில் காவல்துறையினர் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அருண் மற்றும் அருண் சகோதரர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!