Viral News
அத்தையுடன் கள்ளக்காதல்; அடிக்கடி உல்லாசமாக இருந்த மருமகன்; விபரம் தெரிந்து மாமா செய்த பகீர் செயல்; பதிலுக்கு அத்தை எடுத்த விபரீத முடிவு..!
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள செருனா காவல் நிலையப் பகுதியில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் ஜிலே பகுதியை சேர்ந்தவர் பெயர் உத்ரம் தாலுராம். இவரது மனைவி கவுரா தேவி.
இவர்களது உறவினர் குஷால் மேக்வால்.
இவருக்கு கவுராதேவி அத்தை முறை.
தனது அத்தை வீட்டிற்கு குஷால் மேக்வால் அடிக்கடி வருவதுண்டு.
அவ்வாறு வரும் நேரங்களில் குஷால் மேக்வாலுக்கு அத்தை மீது ஒரு கண் ஏற்பட்டுள்ளது.
தனது அத்தையிடம் நெருங்கி பழகினார். இதனை அத்தையும் ஏற்று கொண்டு குஷாலுடன் பழகியுள்ளார்.
இவர்களின் கள்ளக்காதலும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்துள்ளது.
மாமா வீட்டில் இல்லாத நேரங்களில் அத்தை குஷாலை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒருநாள் தனது மனைவியின் நடத்தை மீது மாமாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
இவர்களின் கள்ளக்காதலை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் உத்ரம் தாலுராம்.
தனது மனைவியை கண்டித்துள்ளார். தங்களது மருமகனுடனான கள்ளக்காதலை விட்டு விட கோரி கெஞ்சியுள்ளார்.
ஆனால் கவுரா தேவி தனது கணவரின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
தொடர்ந்து தனது மருமகனுடன் கள்ளகாதலை தொடர்ந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த தாலுராம் குஷாலை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி, சம்பவத்தன்று தன்னுடைய தோட்டத்துக்கு வருமாறு குஷாலை அழைத்து சென்றார்.
அந்த தோட்டத்திலேயே வைத்து குஷாலை கொடூரமாக அடித்து கொலை செய்து உள்ளார்.
அதற்கு பிறகு, உடலை ஒரு ஒட்டகத்தின் மீது வைத்துகிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு போய் வீசினார்.
காலை நேரத்தில், குஷால் சடலமாக ரோட்டோரம் விழுந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணையில் உயிரிழந்த இளைஞரின் அந்தரங்க பகுதியும் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலீசாருக்கு உத்ரம் மீது சந்தேகம் ஏற்பட்டது,
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
ஆனால் சிறிது நேரம் அவர் போலீசாருக்கு தவறாக தகவ்லகளை கூறி தப்பிக்க முயன்றார்.
ஆனால் போலீசார் தங்களது பாணியல் விசாரித்தனர், அப்போது குஷால்ராமை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதை அறிந்த உத்ராமின் மனைவி கவுராதேவி கடந்த திங்கட்கிழமை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்ரமை கொலை வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கௌரவ தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞன் அடித்து கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பினாகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
