Connect with us

    40 ரூபாய் செலவில் 280 கிமீ பயணிக்கும் பேட்டரி ஜீப்பை உருவாக்கி அசத்திய தமிழக இளைஞர்..!

    Battery jeep

    Tamil News

    40 ரூபாய் செலவில் 280 கிமீ பயணிக்கும் பேட்டரி ஜீப்பை உருவாக்கி அசத்திய தமிழக இளைஞர்..!

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை பட்டதாரி இளைஞர் ஒருவர் தயார் செய்துள்ளார்.

    Battery jeep

    இதில் ரூ.40 செலவில் 280 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம்.

    இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது.

    அதிலும் தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங் களால் கார் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் கனவாகவே உள்ளது.

    இருப்பினும் ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் திருப்புவனம் அருகே கீழடியைச் சேர்ந்த கவுதம் என்ற மெக்கானிக் பொறியியல் பட்டதாரி இளைஞர் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் டீசல், பெட்ரோலுக்கு மாற்றாகவும், குறிப்பாக விவசாய தேவைக்கு பயன்படுத்தும் வகையில் லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் ஜீப் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான, அருணகிரி -கவிதா தம்பதியரின் ஒரே மகன் கவுதம்.

    ஏழ்மை நிலையிலும் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கனிக்கல் எஞ்சினியரிங் பயின்று முடித்துள்ளார்.

    ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். படித்து முடித்துவிட்டு சில நாட்கள் வேலையில்லாமல் கம்பி கட்டுகின்ற வேலைக்கும் சென்று உள்ளார்,

    என்னப்பா படித்து முடித்து விட்டு கம்பி கட்டுற வேலைக்கு எல்லாம் போய் கொண்டிருகின்ற என வீட்டில் வேதனைப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து வீட்டிலிருந்த கௌதமுக்கு மாசு ஏற்படாத வகையில் கார் ஒன்றையும் விவசாயத் தேவைக்கு பயன்படுத்துவதற்கும் வகையில் ஜீப் ஒன்றை தயார் செய்து பார்ப்போம் என தோன்றியது.

    குறிப்பாக தற்போது விற்கும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கக் கூடும் ஜீப் ஒன்றை, பழைய பொருட்களை கொண்டு உருவாகியுள்ளார்.

    நான்கு சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் திறனுடன் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை வடிவமைத்து அசத்தி இருக்கிறார் இந்த இளைஞர்.

    கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தையும் பெற்றோர்கள் கடனாக பெற்றுதந்த பணத்தையும் கொண்டு சுமார் ரூ.2,40,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக கூறும் இந்த இளைஞர் பேட்டரி வாங்க வசதியில்லாத நிலையில் வாடகைக்கு பேட்டரி வாங்கி இந்த ஜீப்பை தயாரித்துள்ளார்.

    இந்த ஜீப்பில் லித்தியம் பேட்டரி வாங்கி பயன்படுத்தினால் சுமார் நாற்பது ரூபாய் செலவில் இருநூற்றி எண்பது கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம்.

    குறிப்பாக எந்த ஒரு சவுண்ட் இரைச்சால் இல்லாமல் ஜீப்பை தயாரித்து உள்ளார்.

    மேலும், விவசாய தேவைக்கு உரமூடைகள் கொண்டு செல்வதற்கும் இந்த வாகனம் எளிமயாக பயன்படுவதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக விவசாய பொருட்களை டிராக்டரில் கொண்டு செல்லும்போது அதற்கான டீசல் விலையை விட குறைந்த அளவே பேட்டரியில் இயங்கக்கூடிய அந்த ஜீப் பயன்படுகிறது.

    இதனால் மிகப்பெரிய செலவு மிச்சம் அடைவதாகவும் கூறப்படுகிறது.

    ஜீப்பிற்கான உதிரிபாகங்கள் பல இடங்களில் பழைய பொருட்களை கொண்டு அதனை வாங்கி வந்து வீட்டிலேயே ஜீப்பை உருவாக்கியதாக கூறுகிறார்.

    இதில் ஜீப்பிற்க்கு பயன்படுத்தும் டயர்கள் மட்டும் அதிக செலவானதாக கூறுகிறார் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்.

    சாதனை இளைஞரை வாழ்த்தி பகிருங்கள்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!