Tamil News
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இளம் வயதில் நீதிபதியான இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்..!!
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த இளைஞர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூரை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் ஆதியான் (26) என்ற இளைஞர்.
இவர் திருப்பூர் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்காக அவர் படித்த செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சீனிவாசன் மற்றும் திமுக செயற்குழு உறுப்பினர் சோலை ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நீதிபதி ஆதியான், “இந்த பள்ளியில் தமிழ் வழியில் படித்த பின்னர் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மதுரை சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் தான் படித்தேன்.
நீதிபதி தேர்வு எழுதும் போது நான் மட்டுமே தமிழ் வழியில் கற்றவன். அதுதான் எனது அடையாளமானது.
தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புரிந்து படிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழி மட்டும்தான்” என கூறினார்.
